Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.)
புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் (வயது 92) அண்மை காலமாக மூச்சுத்திணறல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (நவ 22) உயிரிழந்தார். மரணமடைந்த ஈரோடு தமிழன்பன் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள இல்லத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதிச்சடங்கு சென்னை அரும்பாக்கம் மின் மயானத்தில் இன்று (நவ 23) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மறியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் தனது இறுதிக்காலம் வரையிலும் பல வகைமைகளிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரர்.
அவரின் தமிழ் தெண்டினை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b