Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 23 நவம்பர் (ஹி.ச.)
தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக நிர்வாகி புகழேந்தி வந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களே சந்தித்த அவர்கூறியதாவது,
SIR முழுவதுமாக களையப்பட வேண்டும்.
இதனால் மிகப்பெரிய பாதகம் ஏற்படுகிறது.
பாமர மக்கள் எவ்வாறு அந்த படிவங்களை பூர்த்தி செய்ய முடியும்.
இதற்கு ஒரு தீர்வே இல்லாத சூழல் நிலவி வருகிறது.
ஆசிரியர் போன்றவர்களையெல்லாம் இந்தப் பணியில் அலைய விடுகிறார்கள்.
ஆதார் கார்டை ஆவணங்களுடன் இணைத்தார்கள் தற்போது அந்த சிஸ்டம் என்ன ஆனது.
ஒவ்வொரு மனிதருக்கும் தனிநம்பர் கொடுக்கப்பட வேண்டும்.
இதை எதிர்த்து பல்வேறு கட்சிகள் போராடிக் கொண்டிருக்கிறது.
இது போன்ற தேர்தலை நடத்துவது முறையாக இருக்காது ஜனநாயகமாக இருக்காது.
SIRக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தெரிவித்துள்ளார் திண்டுக்கல் சீனிவாசன் எஸ் ஐ ஆர் மூலமாகத்தான் பீகாரில் ஜெயித்தார்கள் என்று கூறுகிறார் ஆனால் இந்த நடைமுறை சரி இல்லை என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறுகிறார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு இதை பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது.
அனைத்து கட்சியினரும் சேர்ந்து மோடியிடம் இந்த திட்டம் வேண்டாம் என்று வலியுறுத்தலாம் ஆனால் அதனை செய்வதற்கு முன் வருவதில்லை.
சி.வி.சண்முகத்தை தேர்தல் ஆணையத்திற்குள் விடாமல் அவமானம் செய்துள்ளார்கள்.
ஜெயலலிதா இறப்பிற்குப் பிறகு 60 பெயர் சொல்லக் கூடிய முக்கியமான நபர்கள் அதிமுகவில் இருந்து விலகிச் சென்றுள்ளார்கள் ஆனால் என்னால் அவர்களது பெயரை கூற முடியாது.
செங்கோட்டையன் அவரே தலைமை தாங்கி யாரையும் நம்பாமல் சென்றால் நன்றாக இருக்கும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை நம்பி சென்றால் ஆபத்தில் முடியும்.
2026 தேர்தலில் இனிமேல் சேருவது என்பது கிடையாது.
2026ல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அதிமுக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது டெபாசிட் க்கு அலைய வேண்டிய சூழல் ஏற்படும்.
திமுக- தவெகவிற்கு தான் போட்டியே,
ஒருங்கிணைப்பு குழுவெல்லாம் வைத்து பார்த்து விட்டோம் யாரும் சேருவதற்கு தயாராக இல்லை.
விஜய் இன்னும் பிற கட்சியில் சேருவது போன்று முடிவு எடுக்கவில்லை அவ்வாறு முடிவு எடுத்தாலும் அது மோசமாய் போய்விடும்.
ஒரு மாதத்திற்குள் பல மாறுதல்கள் வரும்.
அதிமுக பாஜக கூட்டணி தான் முழுவதுமாக டெபாசிட் போவதற்கு காரணமாக அமையும்.
விஜய் வெளியில் வரவேண்டும் முகத்தை காண்பிக்க வேண்டும் மற்றவர்களுடன் பழக வேண்டும் கரூரில் இறந்து போனவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும்.
விஜய்யிடம் எழுச்சியான இளைஞர்களை காண முடிகிறது அதனை அவர்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
Hindusthan Samachar / V.srini Vasan