Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 24 நவம்பர் (ஹி.ச.)
மதுரையில் நடைபெறும் 14 வது ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இங்கிலாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, நமீபியா, உள்ளிட்ட ஹாக்கி அணியினர் மதுரை விமான நிலையம் வருகை தந்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் நெதர்லாந்து ஹாக்கி வீரர்களை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் மாலை அணிவித்து வரவேற்றார்.
அதேபோல் இங்கிலாந்து அணியை மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் வரவேற்றார் தொடர்ந்து நமீபியா ஹாக்கி வீரர்களை மதுரை திட்ட இயக்குனரும், தென்னாப்பிரிக்கா அணியினரை உசிலம்பட்டி துணை ஆட்சியரும் வரவேற்றனர்.
ஒரே நேரத்தில் மதுரை விமான நிலையத்தில் 4 ஹாக்கி அணியினர் வருகை தந்தனர். அவர்களை பறை இசைத்து தமிழக பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக வந்த நெதர்லாந்து அணியினர் பறை இசைக்கு வைப் ஆகி மதுரை விமான நிலையத்தில் ஆடியதை விமான பயணிகள் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
Hindusthan Samachar / Durai.J