Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 24 நவம்பர் (ஹி.ச.)
கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தீவிர வாக்காளர் திருத்த பணியில் BLA2 விவரங்கள் இதுவரை பதிவேற்றம் செய்யாததை கண்டித்து பாஜக மாநில செயலாளர் நந்தகுமார் கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர் சந்தித்து பேசி மாநில செயலாளர் நந்தகுமார்:-
BLA-2 அனைத்து கட்சியினரும் சேர்ந்து தீவிர வாக்காளர் திருத்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.அந்த வகையில் கவுண்டம்பாளையம் தொகுதியில் பாஜக வாக்காளர்களை மட்டும் பதிவேற்றம் செய்யாமல் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு.
மேலும் இது குறித்து பலமுறை வடக்கு வட்டாட்சியரிடம் புகார் அளித்தும் தற்பொழுது வர எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பிறகு தெற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் உறுதி அளித்ததாக தெரிவித்தார்.
அதிகாரிகள் இதுபோல அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் இது குறித்து கேட்டால் உரிய பதிலளிக்காமல் இருப்பதாக தெரிவித்தார்.
Hindusthan Samachar / V.srini Vasan