ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி புலி தாக்கி உயிரிழப்பு
நீலகிரி, 24 நவம்பர் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் நாகி அம்மாள் எனும் மூதாட்டி இன்று (நவ 24) காலை வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றிருக்கிறார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவரை காணவில்லை. எனவே உறவினர்கள் தேடுதலில் இறங்க
nilhrir


நீலகிரி, 24 நவம்பர் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் நாகி அம்மாள் எனும் மூதாட்டி இன்று (நவ 24) காலை வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றிருக்கிறார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவரை காணவில்லை. எனவே உறவினர்கள் தேடுதலில் இறங்கினார்.

அப்போதுதான் நாகி அம்மாளை புலி தாக்கி இழுத்துச் சென்று இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேடுதல் வேட்டையில் வனத்துறைனரும் இணைந்தனர்.

தீவிர தேடுதலில், புலி நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பகுதியில் ஒரு ஓடையில் இருந்து நாகி அம்மாளின் சடலம் வனத்துறையினரால் மீட்கப்பட்டிருக்கிறது.

மீட்கப்பட்ட சடலம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

கால்நடைகளை தாக்கி வந்த புலி, தற்போது மனிதர்களை தாக்கத் தொடங்கி இருப்பதால் இது ஆட்கொல்லி புலியாக இருக்கலாம் என்று பலரும் சந்தேகம் தெரிவித்து இருக்கின்றனர்.

எனவே உடனடியாக புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ