பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்
மும்பை, 24 நவம்பர் (ஹி.ச.) பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாள்களாக சிகிச்சையில் இருந்தார். குணம் அடைந்த
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்


மும்பை, 24 நவம்பர் (ஹி.ச.)

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாள்களாக சிகிச்சையில் இருந்தார்.

குணம் அடைந்து வீடு திரும்பிய அவர், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில் இன்று மதியம் அவர் (நவ 24) காலமானார்.

தர்மேந்திரா 'ஆயி மிலன் கி பேலா', 'பூல் அவுர் பத்தர்', 'ஆயே தின் பஹார் கே', 'சீதா அவுர் கீதா' உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இறுதியாக 2023ல், கரண் ஜோஹர் இயக்கிய 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் தர்மேந்திரா நடித்து இருந்தார்.

அண்மையில் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் காலமானதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவிய நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக அவரது மனைவியும் எம்பியுமான ஹேமமாலினி, அவரது மகள் நடிகை ஈஷா தியோல் உள்ளிட்டோர் உறுதிப்படுத்தினர்.

இந்த நிலையில் அவரது மறைவு செய்தி பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவரது மறைவுக்கு இந்திய திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b