Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 24 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மழை நீர் தேங்கிய பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி இன்று (நவ 24) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்விற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மாநகரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தற்போது ஓடையிலும் வடிகால்களிலும் முழு அளவில் மழை நீர் சென்று கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாநகரைப் பொறுத்தவரை புறநகர் பகுதியில் இருந்து தற்போது வரை எந்த மழை நீரும் மாநகர பகுதிக்குள் வரவில்லை மேலும் மாநகர பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரானது மழையின் அளவு குறைந்தவுடன் படிப்படியாக குறையும்.
தூத்துக்குடி மாநகர மக்கள் கட்டணமில்லா 18002030401 என்ற இந்த எண்ணில் மழை தொடர்பான புகார்களுக்கு எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்.அதே போல் எனது தொலைபேசிக்கும் எந்தநேரமும் தகவல் தொிவிக்கலாம்.
உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாநகராட்சி அதிகாாிகளும் அலுவலா்களும் அந்தந்த பகுதி தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பணியாற்றி வருகின்றனா்.
இவ்வாறு மேயா் ஜெகன் பொியசாமி தொிவித்தாா்.
Hindusthan Samachar / vidya.b