உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு - பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி, 24 நவம்பர் (ஹி.ச.) உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று (நவ.,24) பொறுப்பேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வை
உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு - பிரதமர் மோடி வாழ்த்து


புதுடெல்லி, 24 நவம்பர் (ஹி.ச.)

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில்,

53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று (நவ.,24) பொறுப்பேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் டெல்லி துணைநிலை கவர்னர், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூர்யகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (நவ 24) வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தலைமை நீதிபதியாக பதவியேற்றிருக்கும் சூர்யகாந்தின் எதிர்கால பயணம் சிறக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b