டெல்லியில் காற்று மாசு அபாயம் - 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
புதுடெல்லி, 25 நவம்பர் (ஹி.ச.) சுவாசிக்கும் காற்றின் தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ.) 6 வகைகளாக தரம் பிரிக்கப்பட்டிருக்கிறது. 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது. 101 முதல் 150 புள்ளிகள் இருந்தால் ந
டெல்லியில் காற்று மாசு அபாயம் - 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு


புதுடெல்லி, 25 நவம்பர் (ஹி.ச.)

சுவாசிக்கும் காற்றின் தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ.) 6 வகைகளாக தரம் பிரிக்கப்பட்டிருக்கிறது. 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது.

101 முதல் 150 புள்ளிகள் இருந்தால் நோயாளிகளின் உடல்நலத்துக்கு தீங்கானது. 151 முதல் 200 புள்ளிகள் வரை இருந்தால் ஆரோக்கியமான மக்களின் உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும். 201 முதல் 300 வரை இருந்தால் மக்களின் உடல்நலனுக்கு அதிக தீங்கினை விளைவிக்கும். 301 முதல் 500 வரை இருந்தால் மிகவும் அபாயகரமானதாகும்.

டெல்லியில் காற்று மாசு அளவு 450 புள்ளிகளாக உள்ளது. கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு ஆபத்தான அளவிற்கு உயர்ந்து வருகிறது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்களின் மொத்த பணியாளர்களில் 50 சதவீத பேர் மட்டுமே நேரடியாக அலுவலகத்திற்கு வரவேண்டும். மீதமுள்ள ஊழியர்கள் கட்டாயம் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் இதனை மிக கடுமையாக பின்பற்ற வேண்டும் என்பதோடு அவசர பணிகள் அல்லது பொது பயன்பாடு சேவைகள் மேற்கொள்ள வேண்டிய சூழலில் மட்டுமே கூடுதல் பணியாளர்களை நேரடியாக அழைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையாக தனியார் நிறுவனங்களும் தங்களின் தளவாட மற்றும் நிர்வாக மையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தனியார் நிறுவனங்கள் தங்கள் பணிநேரங்களை கட்டம் கட்டமாக மாற்றி அமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆணை சுற்றுசூழல் மற்றும் வனத்துறை சார்பில் தரப்படுத்தப்பட்ட பதிலளிப்பு செயல் திட்டம் அடிப்படையில் சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம் 1986ன் பிரிவில் 5ன் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

உத்தரவை பின்பற்றாமல் அலட்சியம் காட்டும் அரசு அல்லது தனியார் நிறுவனங்களுக்கு அதே சட்டத்தின் பிரிவு 15 மற்றும் 16ன் கீழ் அபராதங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர் மாசு காலத்தில் மனித நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்தை குறைப்பதில் நோக்கமாக கொள்ளப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b