Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 25 நவம்பர் (ஹி.ச.)
பீகார் சட்டப்பேரவைக்கு நவ.6 மற்றும் 11ஆம் தேதிகளில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து கடந்த நவ 20 ஆம் தேதி பீகார் மாநில முதல்வராக 10வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு ஆளுநர் ஆரிஃப்கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக இருந்த பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, அமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், பீகார் சட்டப்பேரவை வரும் 1ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் 5 நாட்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
சபாநாயகராக ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவருமான நாராயணன் இந்த கூட்டத்தொடரில் புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b