Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 25 நவம்பர் (ஹி.ச.)
கோவை அடுத்த பெரியநாயக்கன்பாளையம். தேவம்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். பால் வியாபாரி.
இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் அவர் பால் வியாபாரம் செய்து வருவதால், அங்கு உள்ள காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ராஜாராம் அவரது மனைவி சௌந்தர்யா ஆகியோர் அறிமுகமாகிய உள்ளதாகவும், அவர்கள் பால் வியாபாரி கோவிந்தராஜிடம் மென்பொருள் சாப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருவதாக தெரிவித்து உள்ளனர். இதில் பங்குதாரராக சேர்ந்தால் மிகக் குறுகிய காலத்தில் அதிகமாக பணம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர்.
மேலும் தங்களது மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய உள்ளதால், அவரை அந்த நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக தெரிவித்து உள்ளனர்.
இதனை உண்மை என்று நம்பிய கோவிந்தராஜ் ரூபாய் 6 லட்சத்தை முதற்கட்டமாக அவர்களிடம் கொடுத்து உள்ளார்.
பின்னர் தெரிந்த நபர்களிடம் இருந்து பணம் பெற்று அவர்களிடம் ரூபாய் 64 லட்சம் வழங்கி உள்ளார்.
மொத்தமாக ரூபாய் 70 லட்சம் பெற்றுக் கொண்ட அவர்கள் கூறியபடி லாபம் எதுவும் தரவில்லை, இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பணம் குறித்து கேள்வி எழுப்பினார்.
லாபம் தரவில்லை என்றாலும் பரவாயில்லை முதலீடு செய்து பணம் ரூபாய் 70 லட்சம் திருப்பித் தரும்படி கேட்டதாக உள்ளார்.
ஆனால் அவர்கள் பணத்தை திரும்பி தராமல் அதனை மோசடி செய்ததுடன், அவரை மிரட்டி உள்ளதாகவும் தெவித்தார்.
Hindusthan Samachar / V.srini Vasan