Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 25 நவம்பர் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்கு உட்பட்ட திருவக்கரை கிராமத்தில் கடந்த 19 11 2025 அன்று திருவக்கரை திமுக வானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் மீது அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை உடனடியாக திமுக பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த சிவி சண்முகம் செய்தியாளர் அவர்களிடம் சில தினங்கள் முன் வலியுறுத்திய நிலையில் தற்போது அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் லட்சுமணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.விசண்முகம் கூறுகையில்,
தமிழ்நாடு காவல்துறை செயலிழந்து விட்டது காவல்துறை கோபாலபுரத்தில் ஏவல் துறையாக மாறி உள்ளது பாலியல் குற்றவாளி இங்கு ஆதரவாக திமுக அறிக்கைகளை வெளியிட்டு இருப்பது பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது துறையின் அமைச்சராக உள்ள முதல்வர் கோவையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக நீதி வழங்கப்படும் என்று கூறிய அவர் விழுப்புரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக அறிக்கை விடுவது வேதனை அளிக்கிறது.
மேலும் குற்றவாளியாக உள்ள விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தின் வழக்கு நடந்து வரும் நிலையில் என்னை பற்றிய அவதூறை அவர் வெளியிடுவது நகைக்கு கூறியது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதனை எதிர்கொள்ள தயார்.
பல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி அண்ணனை கண்டித்தும் வரும் 27ஆம் தேதி மாலை விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J