Enter your Email Address to subscribe to our newsletters

குன்னூர், 25 நவம்பர் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேமுதிகவின் உள்ளம் தேடி இல்லம் நாடி தேர்தல் பரப்புரைக்காக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகை புரிந்துள்ள நிலையில் அவருக்கு படுகர் இன மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து குன்னூர் அருகே கோடமலை கிராமத்திற்கு சென்று படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிந்து அவர்களது பாரம்பரிய இசைக்கு ஏற்று அவர்களுடன் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
234 தொகுதிகளிலும் தேமுதிக வலுவாக உள்ளதாகவும், அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு 2025வது ஆண்டில் சீட்டுகள் கொடுப்பதாக சொல்லி இருந்தார்கள் ஆனால் 2026 ஆவது ஆண்டில் தருவதாக கூறியிருப்பதாகவும், ஆனால் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காக மட்டுமே கூட்டணி அமைப்பது என்ற எண்ணம் தேமுதிகவிற்கு இல்லை என்றும், தொண்டர்கள் விரும்பும் கூட்டணி தமிழக மக்கள் விரும்பும் கூட்டணியில் தேமுதிக அமைக்கும் எனக் கூறினார்.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் மக்களே போற்றக்கூடிய தொண்டர்கள் விரும்பக்கூடிய வெற்றியை தேமுதிக பெரும் எனக் கூறினார்.
வடமாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், ஆனால் ஓட்டுரிமை என்பது அவரவர்கள் பிறந்த மாநிலங்களில் இருக்க வேண்டும், இன்றைக்கு தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கினால் தவறான முன்னுதாரணமாக மாறிவிடும், அதற்கு என்றைக்கும் தேமுதிக துணை நிற்காது என்று கூறினார். இது போன்ற தவறு நிச்சயம் நடக்காது என்று உறுதியாக நம்புவதாகவும், மீறி நடந்தால் மக்கள் புரட்சி வெடிக்கும்.
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனவும், இதற்கு முக்கிய காரணம் அரசு மதுபான கடை, கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் இதனால் யாருக்கும் வேலை வாய்ப்பு இல்லாததே இதற்கு காரணம்.
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயத்தை முன்னேற்ற வேண்டும்.
தமிழ் நாட்டு வாக்குகள் வடமாநிலத்தவர்களுக்கு கொடுப்பது தவறு அதை ஏற்றுக்கொள்ள முடியாது.அவர்கள் பிறந்த மண்ணில் தான் வாக்குகள் போட வேண்டும்.
மேலும் 234 தொகுதிகளிலும் தேமுதிக வலுவாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J