Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 25 நவம்பர் (ஹி.ச.)
மிஸ்ரி என்டர்பிரைசஸ் தயாரிப்பில் ரஜினி கேங் வரும் 27-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கி உள்ளது.இந்த படத்தில் நடிகர் ரஜினி கிஷன்,நடிகை திவிகா,மீரா,மொட்டை ராஜேந்திரன்,கூல் சுரேஷ், கோப்ரா பிரதீப் குமார்,கல்கி ராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜோன்ஸ் ரூபட் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் முழுவதும் காமெடி மற்றும் பேய் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு 25 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டு நவம்பர் 27-ம் தேதி அன்று தமிழக முழுவதும் திரையில் வெளியாகிறது.
இந்த திரைப்படத்தில் ப்ளூ எனும் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
இந்த திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமன ஜி.வி பிரகாஷ் சொக்கு நட சுந்தரி என்ற பாடலையும்,பிரபல பாடகர் ஆண்டனி தாஸ் பேய் குத்து என்ற பாடலை பாடி அசத்தியுள்ளனர்.
இந்த திரைப்படம் 25 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது என வில்லன் நடிகர் கோபுர பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / V.srini Vasan