Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 நவம்பர் (ஹி.ச.)
இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நேற்று பதவியேற்றார்.
சூர்யா காந்த் அடுத்த 15 மாதங்கள் தலைமை நீதிபதி பதவியில் இருப்பார். அவர் பிப்ரவரி 9, 2027 அன்று 65 வயதை எட்டும்போது பணியில் இருந்து ஓய்வு பெறுவார்.
பதவி ஏற்ற முதல் நாளிலேயே 17 வழக்குகளை விசாரித்துள்ளார்.
அத்துடன், வழக்குகளை வாய் மொழியாக தெரிவிக்கக்கூடாது. வழக்குகளை அவசரமாக பட்டியலிட குறிப்பிடுவதை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். மரண தண்டனை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் வாய்மொழி கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
நேற்று ஜனாதிபதி மாளிகையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டு, முறையாக தலைமை நீதிபதியாக பொறுப்பெற்றுக் கொண்டார்.
அதன்பின் மதியம் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். இரண்டு மணி நேரத்தில் 17 வழக்குகளை விசாரித்தார்.
மதியம் உச்சநீதிமன்றம் வருகை தந்த தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் அம்பேத்கர் சிலைகளுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் பாரம்பரிய நீதிமன்ற அறை எண் ஒன்றில் நீதிபதிகள் ஜோய்மல்யா பாக்சி மற்றும் அதுல் எஸ் சந்துர்கர் ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கு தலைமை தாங்கினார்.
Hindusthan Samachar / JANAKI RAM