தென்காசி பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசுப்பணி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் கடந்த 24 ஆம் தேதி காலை இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மல்லிகா என்ற பெண்ணும் உயிரிழந்தார். மல்லிகாவுக்கு பார்வை மாற்றுத
தென்காசி பேருந்து  விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசுப்பணி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு


சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் கடந்த 24 ஆம் தேதி காலை இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மல்லிகா என்ற பெண்ணும் உயிரிழந்தார். மல்லிகாவுக்கு பார்வை மாற்றுத்திறனாளியான கீர்த்திகா என்ற மகள் உள்ளார்.

தந்தை ஏற்கனவே இறந்த நிலையில் விபத்தில் தாயையும் இழந்த கீர்த்திகா பரிதவித்து வருகிறார். இந்நிலையில், தென்காசி பேருந்து விபத்தில் தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளி கீர்த்திகாவுடன் முதல்வர் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார்.

மேலும் அவருக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, கீர்த்திகாவுக்கு புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் டேட்டா எண்ட்ரி பணி வழங்கப்பட்டுள்ளது. பணி ஆணையை தென்காசி மாவட்ட ஆட்சியர் விரைவில் வழங்குவார் என கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b