Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 நவம்பர் (ஹி.ச.)
இந்திய நாடாளுமன்றத்தில் இன்று(நவ 26) அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்
துணை ஜனாதிபதியான பிறகு முதல் முறையாக நாடாளுமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்.
தமிழில் பேச்சை தொடங்கினார்.
அவர் பேசியதாவது:
தாயின் அன்பாய், தந்தையின் அறிவாய், குருவின் ஒளியாய், தாயாய், தந்தையாய், குருவாய், தெய்வமாய், நாம் அனு தினமும் வழிபடுகிற, இன்றைய புனித பாரத அன்னையின் பொற்பாதங்களை முதற்கண் பணிந்து வணங்குவோம், என்று கூறி தன் உரையை தொடங்கினார்.
தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் பேசியதாவது:
சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்வோம். ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு அதிகளவில் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. நமது அரசியலமைப்பு சட்டம், பாரதம் ஒன்று என்பதையும், அது என்றென்றும் ஒன்றாக இருக்கும் என்பதையும் நிரூபித்துள்ளது.
சமூக நீதி, பின்தங்கிய வகுப்பினருக்கு பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கான நமது உறுதிப்பாட்டை அரசியலமைப்பு சட்டம் பிரதிபலிக்கிறது. வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலகளவில் மாறிவரும் சூழ்நிலையில், நீதித்துறை, நிதி போன்ற பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b