ராஜஸ்தானில் இருந்து விலை உயர்ந்த OPIUM என்ற போதை பொருள் கொண்டு வந்து கோவையில் விற்பனை - 10 கிராம் பறிமுதல்
கோவை, 26 நவம்பர் (ஹி.ச.) கோயம்புத்தூர் ZONE சி.ஐ.யூ (CIU) காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவலர்கள் குற்றவாளியை பிடிக்கும் தீவிர தேர்தல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் ராஜஸ்தான சேர்ந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விச
Expensive narcotic substance called opium smuggled from Rajasthan and sold in Coimbatore: 10 grams seized – Central Intelligence Division police conduct a surprise raid.


கோவை, 26 நவம்பர் (ஹி.ச.)

கோயம்புத்தூர் ZONE சி.ஐ.யூ (CIU) காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவலர்கள் குற்றவாளியை பிடிக்கும் தீவிர தேர்தல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ராஜஸ்தான சேர்ந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார். அதில் அவர் முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து OPIUM என்ற விலை உயர்ந்த போதை பொருள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

அவர் ராஜஸ்தானை சேர்ந்த சுனில் பிஸ்னாய் என்றும், மேலும் அவரிடம் நடத்திய சோதனையில் சுமார் 10 கிராம் விலை உயர்ந்த OPIUM என்ற விலை உயர்ந்த போதை பொருள் கைப்பற்றப்பட்டது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ராஜஸ்தானில் இருந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து உயர் ரக போதைப் பொருளான OPIUM விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / V.srini Vasan