தூத்துக்குடியில் கிராம உதவியாளர் பணிகளுக்கான தேர்வு ஒத்திவைப்பு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தூத்துக்குடி, 26 நவம்பர் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தார் ஆகிய ஒன்பது வட்டங்களில் 2025-ஆம் ஆண்டு கிராம உதவியா
கிராம உதவியாளர் பணிகளுக்கான தேர்வு ஒத்திவைப்பு - தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் அறிவிப்பு


தூத்துக்குடி, 26 நவம்பர் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தார் ஆகிய ஒன்பது வட்டங்களில் 2025-ஆம் ஆண்டு கிராம உதவியாளர் பணி நியமனம் தொடர்பாக உச்சபட்ச வயது வரம்பு மறுவரையறைக்கு பின்னர், 01.11.2025 (சனிக்கிழமை) முதல் 15.11.2025 (சனிக்கிழமை) வரையிலும் வட்டாட்சியர் அலுவலகங்களில் நேரிலும் மற்றும் தபால் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்நேர்வில் 17.12.2025 (புதன்கிழமை) அன்று நடைபெற இருந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து 02.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு ஆகிய அனைத்தும் நிருவாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b