டிச 8 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46 -வது கூட்டம்
புதுடெல்லி, 27 நவம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு, கர்நாடகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையை கண்காணிப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி முறைப்படுத்தும் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இ
டிச 8 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டம்


புதுடெல்லி, 27 நவம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு, கர்நாடகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையை கண்காணிப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி முறைப்படுத்தும் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த இரண்டு அமைப்புகளும் அவ்வப்போது கூடி பல்வேறு முடிவுகளை எடுத்து வருகின்றன. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை 45 முறை கூடியுள்ளது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டம் டெல்லியில் டிசம்பர் 8-ம் தேதி பிற்பகல் நடைபெறுகிறது.

காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு தரப்பு வலியுறுத்த உள்ளது.

மேகதாது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஆணையத்தின் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / vidya.b