இறந்து போன 2 கோடிக்கும் அதிகமானோரின் ஆதார் எண்கள் நீக்கம் - அடையாள ஆணையம் நடவடிக்கை
புதுடெல்லி, 27 நவம்பர் (ஹி.ச.) ஆதார் தரவுத்தளத்தின் தொடர்ச்சியான துல்லியத்தன்மையைப் பராமரிக்க நாடு தழுவிய தூய்மைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இறந்துபோன 2 கோடிக்கும் அதிகமானோரின் ஆதார் எண்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் செயலிழக்கச் செய்த
இறந்துபோன 2 கோடிக்கும் அதிகமானோரின் ஆதார் எண்கள் நீக்கம் - அடையாள ஆணையம் நடவடிக்கை


புதுடெல்லி, 27 நவம்பர் (ஹி.ச.)

ஆதார் தரவுத்தளத்தின் தொடர்ச்சியான துல்லியத்தன்மையைப் பராமரிக்க நாடு தழுவிய தூய்மைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இறந்துபோன 2 கோடிக்கும் அதிகமானோரின் ஆதார் எண்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் செயலிழக்கச் செய்துள்ளது.

செயலிழந்த எந்தவொரு ஆதார் எண்ணும் மற்றொரு நபருக்கு மீண்டும் ஒதுக்கப்படமாட்டாது.

இருப்பினும், ஒரு நபர் இறந்தால், அடையாள மோசடி செய்ய அல்லது நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக இத்தகைய ஆதார் எண்ணை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதைத் தடுக்க ஆதார் எண் செயலிழக்கச் செய்யப்படுவது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM