Enter your Email Address to subscribe to our newsletters


தேனி, 27 நவம்பர் (ஹி.ச.)
தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இன்று குழந்தைகள் விளையாட்டு அறையினை (Child Friendly Room) தேனி முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் அவர்கள் மற்றும் தேனி அமர்வு நீதிபதி ஜிஅனுராதா அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில் தேனி முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் தெரிவித்ததாவது, தேனி மாவட்ட நீதித்துறையில் பணிபுரியும் நீதிபதிகள், பணியாளர்களின் குழந்தைகள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர் எழுத்தர்களின் குழந்தைகள் ஆகியோர் பயன்பெறும் வகையில், குழந்தைகள் விளையாட்டு அறை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகள் விளையாட்டு அறையானது GSICC (Gender Sensitization and Internal Complaints Committee)-பராமரிப்பின் கீழ் செயல்படும்.
இதனை நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நூலகம் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை மையத்தினை திறப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தேனி முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் தெரிவித்தார்.
Hindusthan Samachar / V.srini Vasan