துபாயில் டிரிபிள் எம் நிறுவனம் சார்பில் மூவி மேக்கர்ஸ் கிளப் தொடக்கம்
துபாய், 28 நவம்பர் (ஹி.ச.) துபாய் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத் துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வரும் டிரிபிள் எம் நிறுவனம், அதன் நிறுவனரும் தொழிலதிபருமான பாபு ராமகிருஷ்ணன் தலைமையில் புதிய முன்னெடுப்பை செயல்ப
Movie


துபாய், 28 நவம்பர் (ஹி.ச.)

துபாய் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத் துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வரும் டிரிபிள் எம் நிறுவனம், அதன் நிறுவனரும் தொழிலதிபருமான பாபு ராமகிருஷ்ணன் தலைமையில் புதிய முன்னெடுப்பை செயல்படுத்தி உள்ளது.

அமீரகத்தில் வசிக்கும் இந்திய மற்றும் இதர திறமையாளர்களின் திரையுலக கனவுகளை நனவாக்கும் நோக்கில் மூவி மேக்கர்ஸ் கிளப்பை டிரிபிள் எம் தொடங்கியுள்ளது.

துபாயில் நடைபெற்ற மூவி மேக்கர்ஸ் கிளப் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் சிற்பி, நடிகர் பகவதி பெருமாள், நடிகை சௌம்யா மேனன், நடிகர் அப்தல்லா அல் ஜஃபாலி, தொழிலதிபர்கள் வெங்கட், கணேஷ் ஹரி நாராயணன், அனந்த்,திரைப்பட மக்கள் தொடர்பு அலுவலர் நிகில் முருகன், டிரிபிள் எம் நிறுவனத்தின் நிர்வாகிகள் மஞ்சுளா ராமகிருஷ்ணன், சந்தோஷ், ஜெகன், கோமதி, மற்றும் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய டிரிபிள் எம் நிறுவனரும் தொழிலதிபருமான பாபு ராமகிருஷ்ணன்,

அமீரகத்தில் வசிக்கும் திறமையாளர்களுக்கு அவர்கள் பணி மற்றும் இதர காரணங்களுக்காக அவர்களின் கனவான திரைத்துறை வாய்ப்பு கிடைப்பதில்லை.

இதை சமன் செய்யும் நோக்கில் மூவி மேக்கர்ஸ் கிளப் தொடங்கியுள்ளோம்.

இந்த முன்னெடுப்பின் மூலம் அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் தளத்தை நாங்கள் வழங்குகிறோம்.

இதன் வாயிலாக அவர்களுக்கு திரையுலக வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம், என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரையுலகப் பிரபலங்கள்,

இந்த முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு இதன் மூலம் இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாத கலைஞர்களின் திறமைகள் வெளிக்கொணரப்பட்டு அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

உலகெங்கும் வெற்றி கொடி நாட்டில் வரும் பாபு ராமகிருஷ்ணன் தலைமையில் இயங்கி வரும் டிரிபிள் எம் நிறுவனம், வெற்றிகரமான தமிழ் திரைப்படங்களை துபாய் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் விநியோகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / Durai.J