தமிழகத்​தின் 11 மாவட்டங்களுக்கு இன்று மித மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை, 28 நவம்பர் (ஹி.ச.) வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதே போன்று புதுச்ச
தமிழகத்​தின் 11 மாவட்டங்களுக்கு இன்று மித மழைக்கு  வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


சென்னை, 28 நவம்பர் (ஹி.ச.)

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (28.11.2025) காலை 07.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதே போன்று சிவகங்கை, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (27.11.2025) டித்வா புயலாக மாறியது.

இதனையடுத்து தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b