உலகிலேயே மிக அரிதான Cross Hand Replantation சிகிச்சை -இராஜீவ் காந்தி மருத்துவமனை குழுவிற்கு துணை முதல்வர் பாராட்டு
சென்னை, 28 நவம்பர் (ஹி.ச) இரயில் விபத்தில் கைகளை இழந்த நபருக்கு Cross Hand Replantation சிகிச்சையின் மூலம், இடது கையை வலது முழங்கையுடன் இணைத்த மருத்துவக் குழுவினர் சாதனையை பாராட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இத
Dycm


சென்னை, 28 நவம்பர் (ஹி.ச)

இரயில் விபத்தில் கைகளை இழந்த நபருக்கு Cross Hand Replantation சிகிச்சையின் மூலம், இடது கையை வலது முழங்கையுடன் இணைத்த மருத்துவக் குழுவினர் சாதனையை பாராட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

சென்னையில் பணியாற்றி வந்த பீகார் தொழிலாளி ஒருவர் அண்மையில் எதிர்பாராத ரயில் விபத்தில் சிக்கியதில் அவரது இரு கைகளும் துண்டாகின.

இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது. குறிப்பாக, அந்த இளைஞருக்கு Cross Hand Replantation சிகிச்சையின் மூலம், அவரின் இடது கையை வலது முழங்கையுடன் இணைத்து நமது மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

உலகிலேயே மிக அரிதான Cross Hand Replantation சிகிச்சை நமது நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டது இதுவே முதன்முறை.

சவால் மிகுந்த இந்த அறுவை சிகிச்சையை திறமையாக செய்திட்ட மருத்துவமனை முதல்வர் சாந்தாராமன் தலைமையிலான மருத்துவர்களை இன்று நேரில் பாராட்டினோம்.

அவர்களின் மருத்துவப்பணி தொடர வாழ்த்தினோம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ