Enter your Email Address to subscribe to our newsletters

கோவா, 28 நவம்பர் (ஹி.ச.)
ராஜூ சந்ராவின் தமிழ் திரைப்படம் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' இந்திய பனோரமாவில் ஒளிர்கிறது. தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி நடித்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்ற தமிழ் திரைப்படம் 56'வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்திய பனோரமாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது மலையாளி ராஜூ சந்ராவின் முதல் தமிழ் திரைப்படமாகும். அதன் மாறுபட்ட கதை அம்சத்திற்கு கைதட்டல்களைப் பெற்றது. திரைக்கதை மற்றும் இயக்கத்தைத் தவிர, ராஜூ சந்ரா ஒளிப்பதிவையும் கையாண்டுள்ளார்.
இந்த படத்தை பிளான் 3 ஸ்டுடியோஸ் மற்றும் மாதன்ஸ் குரூப் ரோஜி மேத்யூ மற்றும் ராஜூ சந்ரா தயாரித்துள்ளனர். பார்வையாளர்களின் விமர்சனங்களை தொடர்ந்து, படம் அதிக திரைகளில் திரையிடப்படுகிறது.
தமிழில் இருந்து பல படங்கள் வந்திருந்தாலும், இரண்டு படங்கள் மட்டுமே திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' படமும், மலையாள இயக்குனர் ராஜூ சந்ராவின் மூன்றாவது படமான 'பிறந்தநாள் வாழ்த்துகள்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படத் துறையில் ஒரு பெரிய விவாதமாக மாறியுள்ளது.
ஏற்கனவே 'ஜிம்மி இண்ட ஜீவிதம்' மற்றும் 'ஐ ஆம் எ பாதர்' மலையாள படத்திற்குப் பிறகு, ராஜூ சந்ரா இயக்கிய முதல் தமிழ் திரைப்படம் பிறந்தநாள் வாழ்த்துகள் ஆகும். தமிழ் கிராமப்புற பின்னணியில் உருவாக்கப்பட்ட நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த குடும்பத் திரைப்படமாகும்.
மலையாளியான ஐஸ்வர்யா அனில் முதல் முறையாக இந்த தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஸ்ரீஜா ரவி மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரோஜி மேத்யூ மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தேசியளவில் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது படத்தின் வித்தியாசமான கதைக்களம்.
தமிழ் திரைப்படத்துறையை சார்ந்த அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒன்று. ஒவ்வொரு நடிகரின் சிறப்பம்சமும், படத்தின் ஒளிப்பதிவும் பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பு அனுபவத்தை அளித்துள்ளன.
Hindusthan Samachar / Durai.J