Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 28 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே முப்புலிவெட்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்டக்கூறுகள் வருவாய் ஒப்படைப்புத் திட்டம் 2025 - 2026 கீழ் ரூ.75.00 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மினி அவுளி பூங்கா அமைத்தல் அடிக்கல் நாட்டு விழா இன்று (28/11/2025) நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / Durai.J