Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 நவம்பர் (ஹி.ச.)
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக டிச.4-ம் தேதி இந்தியா வருகிறார்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 23-வது இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அரசு முறைப் பயணமாக டிச. 4ல் இந்தியா வருகிறார். டிச.5-ம் தேதி வரை அவரது பயணம் இருக்கும்.
இந்த பயணத்தின்போது, அதிபர் புதின், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். ரஷ்ய அதிபர் புதினை வரவேற்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்தளிக்கிறார்.
இந்த அரசுமுறைப் பயணம், இருதரப்பு உறவுகளில் நிலவும் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யவும், சிறப்பான, சலுகையுடன் கூடிய இருதரப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வையை முன்வைக்கவும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் இந்திய மற்றும் ரஷ்ய தலைமைக்கு வாய்ப்பாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b