Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 நவம்பர் (ஹி.ச.)
தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம்.
இந்த ஆண்டும் காற்று மாசு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது.
அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. காற்றின் தரம் மிகவும் மோசமாகியுள்ளதால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
காற்று மாசை கட்டுப்படுத்த ஆளும் பா.ஜ.க. அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் டிசம்பர் 1-ந்தேதி மீண்டும் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், காற்று மாசு பிரச்சினைகளை கண்டறிந்த நாம், அதற்கான தீர்வுகளையும் கண்டறிய வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தீர்வுடன் வரும் என்று நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM