Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 28 நவம்பர் (ஹி.ச.)
ராமேசுவரம்-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி ராமேசுவரத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06080) மறுநாள் காலை 10.10 மணிக்கு திருப்பதியை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில் வருகிற 2-ந்தேதி, 9-ந்தேதி ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் செவ்வாய்க்கிழமை இரவு 10.10 மணிக்கு திருச்சிக்கு வந்து 10.15 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து காலை 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06079) மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு ராமேசுவரம் வந்து சேரும்.
இந்த சிறப்பு ரெயில் வருகிற 3-ந்தேதி, 10-ந்தேதி ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ரெயில் புதன்கிழமை நள்ளிரவு 11.05 மணிக்கு திருச்சிக்கு வந்து 11.10 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
Hindusthan Samachar / JANAKI RAM