Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 28 நவம்பர் (ஹி.ச.)
கோவையில் இன்று 28.11.2025 காலை 11 மணிக்கு, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது..
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.முருகன் தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் ஏ.அஸ்ரப் அலி, கே.புருஷோத்தமன், பி.மௌனசாமி, என்.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் பழங்குடி மற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கான துணைத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி, கடந்த 10 ஆண்டுகளாக படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நிதியை குறைப்பதை கைவிட வேண்டும்.
மேலும்பட்டியல் இன மக்களின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப ஆண்டுதோறும் திட்ட நிதியை உயர்த்தி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலும் பட்டியல் இன மக்களுக்கு என்று ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியை இலவசத் திட்டங்கள் போன்ற வேறு பயன்பாடுகளுக்கு மடைமாற்றம் செய்யக்கூடாது.
எனவும் பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கப்படும் நலநிதியை முழுமையாக செலவழிக்காமல் திருப்பி அனுப்புவதை கைவிட வேண்டும். என இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பபட்டன
மேலும் இந்த ஆர்பாட்டத்தில்ரவிக்குமார், சி.ஜீவா, எம்.சபாபதி, ஆர்.செல்வராஜ், என்.ஜீவானந்தம், சி.குழந்தைவேல் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan