குறுகிய கால பயணமாக இந்தியா வரும் சீனர்களுக்கான வர்த்தக விசாவை விரைவாக வழங்க மத்திய அரசு முடிவு
புதுடெல்லி, 13 டிசம்பர் (ஹி.ச.) லடாக் எல்லைப் பிரச்னைக்கு பின், சீன நாட்டினருக்கான விசாவை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியது. கடந்த ஆகஸ்டில், சீன அதிபர் ஷீ ஜின்பிங் - பிரதமர் மோடி சந்திப்புக்கு பின் உறவு சீரானது. இருநாடுகளும் நேரடி விமானங்களை இ
குறுகிய கால பயணமாக இந்தியா வரும் சீனர்களுக்கான வர்த்தக விசாவை விரைவாக வழங்க மத்திய அரசு முடிவு


புதுடெல்லி, 13 டிசம்பர் (ஹி.ச.)

லடாக் எல்லைப் பிரச்னைக்கு பின், சீன நாட்டினருக்கான விசாவை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியது.

கடந்த ஆகஸ்டில், சீன அதிபர் ஷீ ஜின்பிங் - பிரதமர் மோடி சந்திப்புக்கு பின் உறவு சீரானது. இருநாடுகளும் நேரடி விமானங்களை இயக்க துவங்கின.

சீனர்களுக்கான சுற்றுலா விசா கடந்த ஜூலை முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குறுகியகால பயணமாக இந்தியா வரும் சீன தொழில் துறையினருக்கு, முன்னர் ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் வகையிலான வர்த்தக விசா வழங்கப்பட்டது.

இனி இந்த வர்த்தக விசாவை, மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் விரைவாக வழங்கவும், இந்தியாவில் அவர்கள் தங்குவதற்கான காலத்தை ஆறு மாதங்களில் இருந்து குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வர்த்தக விசா விண்ணப்பங்களை சரிபார்க்கும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை.

இதன் மூலம், சீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்தும் நம் நாட்டு நிறுவனங்களுக்கு வரும் சீன தொழில் துறையினர் அதிக பலன் அடைவர் என கூறப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM