Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 13 டிசம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டில் இருந்து மேல்மருவத்தூர் செல்லும் சாலையில் உள்ள மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவிலானது புகழ்பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும்.
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவர் காலத்து அரசனான ராஜசிம்மவர்மன் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது.
கோயிலில் மூலவரான ஸ்ரீராமர் 8 அடி உயரத்தில் காட்சி தருகிறார்.
ஸ்ரீராமருடன் வலது கையில் வில்லை ஏந்தியபடி லக்ஷ்மணரும், சீதையின் கையில் தாமரை மலர் ஏந்திய கோலத்திலும் காட்சி தருகின்றனர்.
பக்தர்கள் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட ஸ்ரீராமர், தனது அம்புகளால் ஏரியின் கரை உடையாமல் காத்தருளியதாகவும், அதனால்தான் ராமபிரான் ஏரி காத்த ராமர் என்று அழைக்கப்படுவதாகவும் தல வரலாறு கூறுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று, கடந்த சில மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது.
இதையடுத்து, உபயதாரர் நிதியின் மூலமாக, கொடி மரத்திற்கு அருகில் உள்ள பலிபீடத்துக்கு, செப்பு தகடுகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / vidya.b