Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 டிசம்பர் (ஹி.ச.)
ஆப்பரேஷன் சிந்தூருக்குப் பிறகு, நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வலுப்படுத்தும் முயற்சியில் மத்திய பாதுகாப்புத்துறை ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பினாகா ராக்கெட்டின் தாக்குதல் தூரத்தை அதிகரிப்பதற்காக, 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ளது.
இது குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது;
120 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட பினாகா ராக்கெட்டுகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தினால் (DRDO) உருவாக்கப்படும். இனி வரும் காலத்தில் முதலாவது சோதனைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு, ஏலத்தின் மூலம் உற்பத்தி மற்றும் மேம்பாட்டிற்கான நிறுவனத்தை தேர்வு செய்து, அதனுடன் இணைந்து இந்த ராக்கெட் உருவாக்கப்படும்.
தற்போது 40 கிலோ மீட்டர் மற்றும் 75 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது. தற்போது, 120 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பினாகா ராக்கெட்டுகள் உருவாக்கப்பட உள்ளன, என்று தெரிவித்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏடிஎம் வகை1 மற்றும் எம்கே1 ராக்கெட்டுகளை பினாகா பல ஏவுகணை அமைப்புக்காக (MLRS) மொத்தம் 10,147 கோடி ரூபாய் மதிப்பில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதனுடன், 'சக்தி' மென்பொருளில் மேம்பாடுகள் செய்வதற்கான ஒப்பந்தமும் பாரத் ஈலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / JANAKI RAM