Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 13 டிசம்பர் (ஹி.ச.)
கேரளமாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அண்மையில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மொத்தம், 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று(டிச 13) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணியைக் காட்டிலும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியே பெரும்பான்மையை இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 4ல் முன்னிலை வகிக்கிறது. கண்ணூர், எர்ணாகுளம், கொல்லம், திருச்சூர் ஆகிய 4 மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றுகிறது. ஆளும் இடதுசாரி கூட்டணி கோழிக்கோடு மாநகராட்சியில் முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல, திருவனந்தபுரம் மேயர் பதவியை பாஜ தன்வசப்படுத்துகிறது. மொத்தம் உள்ள 101 வார்டுகளில் பாஜ கூட்டணி 55 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மொத்தம் உள்ள 941 கிராம பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கூட்டணி 439 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 373 இடங்களிலும், என்டிஏ கூட்டணி 23 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
மொத்தம் உள்ள 152 வட்டார ஊராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 81 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 63 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
14 மாவட்ட பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
87 நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 55 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 28 இடங்களிலும், என்டிஏ கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b