Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 13 டிசம்பர் (ஹி.ச.)
கால்பந்து போட்டியின் ஜாம்பவனாக திகழும் அர்ஜெண்டீனா நாட்டைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர், அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக கொல்கத்தா விமான நிலையத்துக்கு இன்று (டிச 13) அதிகாலை வந்தார். அப்போது விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கொல்கத்தாவில் சால்ட் லேக் மைதானத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தனது 70 அடி சிலையை கால்பந்து மெஸ்ஸி இன்று (டிச 13) திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மேற்கு வங்க அமைச்சர் சுஜித் போஸ் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொல்கத்தாவில் இன்று நடைபெறும் நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் பங்கேறும் மெஸ்ஸி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உடன் சந்தித்துப் பேசவுள்ளார். அதனை தொடர்ந்து ஹைதராபாத்துக்கு சென்று அங்கு நடைபெறும் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
அப்போது, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்துப் பேச இருக்கிறார். இதையடுத்து மும்பைக்குச் சென்று இந்திய கிரிக்கெட் கிளப்பில் நடைபெறும் படேல் கோப்பை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். அதனை தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச இருக்கிறார்.
Hindusthan Samachar / vidya.b