Enter your Email Address to subscribe to our newsletters


புதுடெல்லி, 13 டிசம்பர் (ஹி.ச.)
இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 5 பேர் நடத்தி இந்த தாக்குதலில் போலீசார், பாதுகாப்புப்படையினர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று (டிச 31) அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி இன்று (டிச 13) அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்பு படையினர் படத்திற்கு பிரதமர் மோடியைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினர். மேலும் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.
இது குறித்த புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் இன்று (டிச 13) பகிர்ந்துள்ள பிரதமர் மோடி கூறியிருப்பதாவது,
இந்த நாளில், 2001-ஆம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலின் போது தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களை நமது தேசம் நினைவுகூர்கிறது.
பெரும் ஆபத்தை எதிர்கொண்டபோதும், அவர்களின் துணிச்சல், விழிப்புணர்வு மற்றும் அசைக்க முடியாத கடமையுணர்வு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
அவர்களின் இந்த உன்னத தியாகத்திற்காக இந்தியா என்றென்றும் நன்றியுடன் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b