Enter your Email Address to subscribe to our newsletters

பஞ்சாப், 13 டிசம்பர் (ஹி.ச.)
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வாகனத்தை வழிமறித்து திருட முயன்ற மர்ம நபர்களிடம் இருந்து,
இரண்டு பெண்கள் தைரியமாக போராடி தப்பினர்.
ஸ்கூட்டியில் சென்றுக் கொண்டிருந்த பெண்களை, பைக்கில் வழிமறித்த இரண்டு பேர் பையை பிடுங்க முயற்சி செய்தனர்.
ஆனால் பையை விடாமல் பெண் தொடர்ந்து போராடிய நிலையில், கத்தியை காட்டி மிரட்டியும் அஞ்சாததால், வேறு வழியின்றி இருவரும் தப்பிச் சென்றனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், அதனை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam