Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 டிசம்பர் (ஹி.ச.)
2026 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தொழில் நுட்ப சேவைகள் பணிகளுக்கான அறிவிப்பு 2026 மே 20ஆம் தேதி வெளியாகும்.
இதற்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறும். குரூப் 1 பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்பட்டு, தேர்வு செப்டம்பர் 6ஆம் தேதி நடத்தப்படும்.
குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகி, தேர்வு அக்டோபர் 25ஆம் தேதி நடைபெறும். மேலும், குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு அக்டோபர் 6ஆம் தேதி வெளியிடப்பட்டு, தேர்வு டிசம்பர் 20ஆம் தேதி நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதில் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சுமார் 4,000 காலிப்பணியிடங்களுடன் கூடுதலாக 400 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் (VAO), வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ளன.
இந்த அறிவிப்பு, குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வரும் லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b