Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 13 டிசம்பர் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகமாக மயில்கள் வசித்து வருகின்றன.
சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் புதூர் பகுதியிலும் ஏராளமான மயில்களைக் காணலாம்.
இன்று (டிச 13) நாரணாபுரம் புதூர் பகுதியில் உள்ள பள்ளி அருகே ஆண் மயில் ஒன்று உணவைத் தேடி வேறு இடத்திற்கு செல்ல முயன்றபோது, அந்த பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்கம்பி மீது அமர்ந்ததையடுத்து மின்சாரம் பாய்ந்ததில் துடிதுடித்து உயிரிழந்து கீழே விழுந்தது.
இதையடுத்து அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மயிலை காட்டுக்குள் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
பசிக்காக உணவு தேடி வந்த மயில் கோரமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b