Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 14 டிசம்பர் (ஹி.ச.)
கேரள மாநிலம் கண்ணூர் உள்ளாட்சித் தேர்தல் முடிவு எதிரொலி கம்யூனிஸ்ட் முஸ்லீம் லீக் தொண்டர்கள் பட்டாசு, கற்கள் வீசி நேருக்கு நேர் மோதல் குறித்தான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மோதல் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பாராட்டு பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் முஸ்லிம் லீக் கட்சி தொண்டர்களும் எதிரும் புதிருமாக மோதினர்.
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையிலானோர் கும்பலாக ஒரு சாலையில் எதிர் எதிர் திசைகளில் நின்று கொண்டு பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை வீசியும் கற்களை வீசியும் நேருக்கு நேராக மோதலில் ஈடுபட்டனர்.
தேர்தல் பணிகளில் ஈடுபட்ட போது ஏற்பட்ட முன்விரோதத்தை தொடர்ந்து தேர்தல் முடிவு வெளியான நிலையில் அரசியல் கட்சிகளின் தொடர் வன்முறையில் ஈடுபடும் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாராட்டு பகுதியில் போர்க்களம் போல இரு கட்சியினரும் மல்லுக்கட்டிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி ஆகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam