Enter your Email Address to subscribe to our newsletters

கர்நாடகா, 14 டிசம்பர் (ஹி.ச.)
கர்நாடக மாநிலம் பெங்களூரு சந்திரா லே-அவுட் பகுதியில் வசித்து வந்த மோனிகாவிற்கு (வயது 35) திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்தார்.
இந்நிலையில், இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்த மோனிகா, ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
மோனிகாவின் இன்ஸ்டா ரீலுக்கு ரசிகரான பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த ராகவேந்திரா என்பவர், மோனிகாவிற்கு ஃபாலோ ரிக்வஸ்ட் கொடுத்துள்ளார்.
அதனை அக்சப்ட் செய்த மோனிகா தொடர்ந்து அவருடன் உரையாடி வந்ததாகக் கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் இணக்கம் அதிகமாகி, கள்ளக்காதலாக மாறியுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதை மறந்த மோனிகா போலீசாருடன் நெருங்கி பழகியுள்ளார்.
அடிக்கடி தனிமையில் சந்தித்ததோடு வீட்டிற்கும் அழைத்து வந்து இணக்கமாக இருந்துள்ளனர். போலீசார் ராகவேந்திராவுக்கும் திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்த இந்த கள்ளக்காதல் ஜோடி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர்.
மோனிகா தனது வீட்டில் இருந்த 160 கிராம் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு போலீஸ்காரர் ராகவேந்திராவுடன் சென்ற நிலையில், அவரது இரண்டாவது கணவர் போலீசில் புகார் அளித்தார்.
இந் நிலையில் போலீசார் ராகவேந்திராவை பணியிடை நீக்கம் செய்து உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam