Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை அடுத்த திரிசூலத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் மின்னல் வி.குமார் தலைமையில் மாவட துனை செயலாளர் சுனிதா ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக த வெ க கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்த் கலந்து கொண்டு தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அதனை பார்வையிட்டு மாவட்ட செயலாளர் மின்னல்குமார், துனை செயலாளர் சுனிதா ரமேஷ் மற்றும் அனைத்து கழக நிர்வாகிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டர்.
அதனைத் தொடர்ந்து பரங்கிமலை ஒன்றியம் திரிசூலம் பகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கபடி விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக 20 ஆயிரம் ரூபாயும், தீ விபத்தினால் வீடு இழந்து தவித்து வந்த குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாயும் நலத்திட்ட உதவியாக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பரங்கிமலை ஒன்றியம் தலைமை சங்கர் முன்னிலையில் வழங்கினர்.
இதில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பல்லாவரம், அஸ்தினாபுரம்,பம்மல், பொழிச்சலூர்,அனகாபுத்தூர், பரங்கிமலை ஒன்றியம் பகுதி செயலாளர்கள், வட்டகழக செயலாளர்கள், மகளிர் அணியினர், உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு மாவட்ட கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
Hindusthan Samachar / Durai.J