இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்
அடிலெய்டு, 16 டிசம்பர் (ஹி.ச.) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்றுள்ள 2 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னில
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்


அடிலெய்டு, 16 டிசம்பர் (ஹி.ச.)

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் நடைபெற்றுள்ள 2 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி நாளை (17-ம் தேதி) அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இங்கிலாந்து விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அந்த அணியில் கடந்த போட்டியில் ஆடிய கஸ் அட்கின்சன் நீக்கப்பட்டு ஜோஷ் டங் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் பின்வருமாறு:

ஜாக் கிராலி (கேப்டன்), பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங்.

Hindusthan Samachar / JANAKI RAM