கைலாய பக்தி பேரவை மற்றும் பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து ஆதியோகி ரத யாத்திரை
கோவை, 16 டிசம்பர் (ஹி.ச.) கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து, ஆதியோகி ரத யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளன.இந்த ரத யாத்திரை, தேவ
Yatra


கோவை, 16 டிசம்பர் (ஹி.ச.)

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து, ஆதியோகி ரத யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளன.இந்த ரத யாத்திரை, தேவாரம் பாடல் பெற்ற திருக்கோவில்கள் வழியாகச் செல்ல உள்ளது.

ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

இந்த ஆண்டு ஆதியோகி ரத யாத்திரையை தென் கைலாய பக்தி பேரவையுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய ஆதீனங்கள் நடத்த உள்ளன.குறிப்பாக தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் ஆதியோகி ரத யாத்திரை அந்தந்த பகுதிகளில் உள்ள ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

அந்த வகையில் மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரை,கோவை ஆதியோகி முன்பு வரும் 17-ம் தேதி தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைக்க உள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN