பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் ரெட்ஹில்ஸ் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு
சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச.) பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் ரெட்ஹில்ஸ் பகுதியில் நாளை (டிசம்பர் 17) மின்தடை ஏற்படவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: புதிய 11 கி.வோ
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் ரெட்ஹில்ஸ் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு


சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச.)

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் ரெட்ஹில்ஸ் பகுதியில் நாளை (டிசம்பர் 17) மின்தடை ஏற்படவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

புதிய 11 கி.வோ. பிரேக்கர் மற்றும் மின்இணைப்புக்கான பணிகள் சென்னை வளர்ச்சி வட்டம் (CDC) மூலமாக 33/11 கி.வோ. ரெட்ஹில்ஸ் துணைமின் நிலையத்தில் நாளை (17.12.2025, புதன்கிழமை) அத்தியாவசிய மற்றும் அவசிய பணி மேற்கொள்ள இருப்பதால் பின்வரும் இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ரெட்ஹில்ஸ்:

புதுநகர் 3 மற்றும் 5 வது தெரு, நாரவாரிகுப்பம், தர்காஸ் சாலை, கோமதியம்மன்நகர், ஜே.ஜே.நகர், தீர்த்தகரயாம்பட்டு, பாலவிநாயகர்நகர், விவேக் அக்பர் அவென்யு, பாடியநல்லூர், ஆர்.ஜே.என். காலனி, கும்மனூர், ஜெயதுர்காநகர். பாலவாயல், மனிஷ்நகர், கண்ணம்பாளையம், சென்றம்பாக்கம், சிருங்காவூர், பெருங்காவலூர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b