Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 16 டிசம்பர் (ஹி.ச.)
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ, சைவ ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் இன்று (டிசம்பர் 16) நடைபெற்றன.
தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற தலங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதனால் அதிகாலை முதல் சங்கர நாராயண சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் சங்கரலிங்க சுவாமி சன்னதி, சங்கர நாராயணர் சன்னதி, கோமதி அம்மன் சன்னதி, சண்முகர் சன்னதி ஆகிய சன்னதிகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் மார்கழி பிறப்பையொட்டி மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
மூவலர் மற்றும் உற்சவ தெய்வங்களுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Hindusthan Samachar / vidya.b