அரசியல், பண பலத்தை வைத்துக்கொண்டு மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை கும்பல் மாஃபியா போல் செயல்படுகிறது - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச) சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளக்கொள்ளையை தடுக்க அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்
Madras High Court


சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச)

சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளக்கொள்ளையை தடுக்க அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்து என கனிம வலத்துறை தெரிவித்துள்ளது.

எத்தனை வழக்குகளில் இதுவரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அது தொடர்பான விவரங்களை ஏன் தாக்கல் செய்யவில்லை? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

5 கோடி ரூபாய்க்கு கனிம வளம் கொள்ளையடிக்கப்படும் நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதில் என்ன பயன் என்றும் மணல் மற்றும் கனிம வளக்கொள்ளையை தடுப்பது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை தொடர்பான வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வு உத்தரவிட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ