மரத்தின் மீது கார் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு!
காந்தி நகர், 17 டிசம்பர் (ஹி.ச.) குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் பகுசாரா பகுதியில் இன்று (டிசம்பர் 17) அதிகாலை சென்றுகொண்டிருந்த காரில் 4 பேர் பயணித்தனர். அந்த கார் பகுசாரா பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சா
மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு


காந்தி நகர், 17 டிசம்பர் (ஹி.ச.)

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் பகுசாரா பகுதியில் இன்று (டிசம்பர் 17) அதிகாலை சென்றுகொண்டிருந்த காரில் 4 பேர் பயணித்தனர்.

அந்த கார் பகுசாரா பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். எஞ்சிய ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b