Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச.)
யுவா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவா கிருஷ்ணா தொலட்டி தயாரிப்பில், மெஹர் யாரமாட்டி இயக்கத்தில், பாபி சிம்ஹா மற்றும் ஹெப்பா படேல் நாயகன்–நாயகியாக நடித்துள்ள புதிய திரைப்படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.
முகூர்த்த நேரத்தில் முதல் ஷாட்டுக்கு எஸ்.கே.என் கிளாப் அடிக்க, வம்சி நந்திபதி கேமராவை ஆன் செய்தார். தனிகில்லா பரணி படத்தின் திரைக்கதையை படக்குழுவினரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முழு படக்குழுவும் கலந்து கொண்டது.
இந்த படத்தில் தனிகில்லா பரணி மற்றும் சூர்யா ஸ்ரீனிவாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜே. கிருஷ்ணா தாஸ் ஒளிப்பதிவாளராகவும், சித்தார்த் சதாசிவுனி இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
விவேக் அண்ணாமலை கலை இயக்குநராக இருக்கிறார்.
விழாவில் தயாரிப்பாளர் யுவா கிருஷ்ணா தொலட்டி பேசுகையில்:
அனைவருக்கும் என் வணக்கம். இயக்குநர் மெஹர் என் நண்பர். இந்த படத்திற்காக பல கதைகளை கேட்டேன்.
ஆனால் மெஹர் இந்த கதையை சொன்னவுடனே மிகவும் பிடித்தது. அருமையான திரைக்கதை. நடிகர்களுக்கு நடிப்பில் சிறந்த வாய்ப்புகள் உள்ள கதை இது. இந்த கதையை கேட்டவுடன் முதலில் பாபி சிம்ஹா அவர்கள்தான் நினைவுக்கு வந்தார். பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த வேளையில் அவரை அணுகி இப்படத்தின் கதையை கூறினோம். அவரும் கதையை கேட்டவுடன் மிகவும் பிடித்ததாக சொல்லி உடனே ஒப்புக்கொண்டார்.
அது எங்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்தது. தயாரிப்பாளராக எந்த சமரசமும் இல்லாமல், கதைக்கு தேவையான அனைத்தையும் வழங்கி ஒரு சிறந்த படமாக உங்கள்முன் கொண்டு வருகிறோம்.என்றார்.
இயக்குநர் மெஹர் யாரமாட்டி பேசியதாவது:
அனைவருக்கும் வணக்கம். இது இயக்குநராக எனது முதல் படம். உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். எங்கள் முழு குழுவிற்கும் நன்றி.
சூர்யா ஸ்ரீனிவாஸ் பேசும்போது:
அனைவருக்கும் வணக்கம். பாபி சிம்ஹா அவர்களுடன் முதல் முறையாக வேலை செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஹெப்பா படேல் அவர்களுடன் மீண்டும் நடிப்பது சந்தோஷமாக உள்ளது. எங்கள் முழு குழுவிற்கும் நன்றி. இந்த படம் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும்.என்றார்
நடிகர் தனிகில்லா பரணி பேசும்போது:
பாபி சிம்ஹா ஒரு சிறந்த நடிகர். அவர் பல சிறந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். சூர்யா ஸ்ரீனிவாஸுடன் ‘ப்ரோ’ படத்தில் ஏற்கனவே நடித்துள்ளேன். மெஹர் இந்த படத்தை சிறந்த கதைக்களத்துடன் உருவாக்குகிறார். இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். பாபி சிம்ஹாவுக்கு இது மிகவும் சவாலான கதாபாத்திரம்.என்றார்.
ஹெப்பா படேல் பேசியது:
அனைவருக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்கு சிறந்த கதைக்களத்துடன் ஒரு படம் கிடைத்துள்ளது. சூர்யாவுடன் இரண்டாவது முறையாக பணியாற்றுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. பாபி சிம்ஹா அவர்களுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படம் கண்டிப்பாக அனைவரையும் மகிழ்விக்கும்.என்று தெரிவித்தார்.
நாயகன் பாபி சிம்ஹா பேசும் போது:
அனைவருக்கும் வணக்கம். ‘வால்டேர் வீரய்யா’ படத்திற்கு பிறகு உங்களை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தெலுங்கில் நாயகனாக ஒரு படம் செய்ய வேண்டும் என்று நினைத்தபோது பல கதைகளை கேட்டேன். ஒரு நல்ல கதைக்காக காத்திருந்த நேரத்தில் யுவா எனக்கு அழைப்பு கொடுத்தார். கதையை கேட்டவுடன் மிகவும் பிடித்தது.
இது ஒரு நடிகனாக எனக்கு சவாலான கதை. என் திரைவாழ்க்கையில் இது ஒரு புதிய முயற்சி. இதில் தாத்தா கதாபாத்திரம் உள்ளது. அந்த வேடத்தை பரணி அவர்கள் செய்கிறார் என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அவருடன் நடிப்பது ஒரு பெரிய சந்தோஷம்.
ஹெப்பா ஒரு சிறந்த நடிகை. அவருடன் பணியாற்றுவதும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் நல்ல குழுவுடன் இந்த படத்தை செய்கிறோம். தயாரிப்பாளர் யுவா மிகவும் ஆர்வமுள்ளவர். இந்த கதை சவாலானதாக இருப்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். டிசம்பர் 22 முதல் விசாகபட்டினத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறோம்.என்றார்.
Hindusthan Samachar / Durai.J